திருவண்ணாமலையில் சிறப்பு மனு விசாரணை முகாம்!
மனுக்களை பெற்றுக்கொண்ட எஸ்பி
திருவண்ணாமலையில் பொதுமக்கள் குறைதீர் சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன் தலைமையில் பொதுமக்கள் குறைதீர் சிறப்பு மனு விசாரணை முகாம் திருவண்ணாமலை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை மனுக்களாக அளித்தனர். இதனை பெற்றுக்கொண்ட காவல் கண்காணிப்பாளர் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
Next Story