சிவராத்திரியை முன்னிட்டு பரமத்தி அங்காளபரமேஸ்வரி கோயிலில் சிறப்பு பூஜை !

சிவராத்திரியை முன்னிட்டு பரமத்தி அங்காளபரமேஸ்வரி கோயிலில் சிறப்பு பூஜை !

சிறப்பு பூஜை

பரமத்தி வேலூர் அருகே உள்ள பரமத்தி அங்காளபரமேஸ்வரி கோயிலில் மாசி மாத மஹா சிவராத்தியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
பரமத்தி அங்காளபரமேஸ்வரி கோயிலில் ஒவ்வொரு வருடமும் மாசி மாத மகா சிவராத்திரியை முன்னிட்டு மஹா சிவராத்திரி அபிஷேகமும்,மாசான கொல்லை நிகழ்ச்சியும் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த வருடமும் மாசி மாத மஹா சிவராத்திரியை முன்னிட்டு வியாழக்கிழமை இரவு மெகமிட்ட கொப்பரை பூஜையும் நடைபெற்றது. இன்னு மஹா சிவராத்திரி அபிஷேகமும்,சிறப்பு ஆரதனையும் நடைபெற்றது. பூஜையை முன்னிட்டு அங்காளபரமேஸ்வரி சிவலிங்கத்தை மடிமீது வைத்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தது. விழாவை தொடர்ந்து சனிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு மேல் 5 மணிக்குள் கரகம் பாவித்து புறப்படுதலும்,அழகு தரிசனமும் நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு மேல் பிள்ளைப்பாவை நிகழ்ச்சியும்,திங்கட்கிழமை 5 மணிக்கு மேல் மாசான கொல்லை மற்றும் பூஜைகளும், செவ்வாய்க்கிழமை காப்பு அவிழ்த்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை 14 சமுதாய குடிபாட்டு மக்கள், கோயில் பூசாரிகள் மற்றும் பம்பைக்காரர்கள் செய்து வருகின்றனர்.

Tags

Next Story