சாய்பாபா ஆலயத்தில் சிறப்பு பூஜை

X
சாய்பாபா ஆலயத்தில் சிறப்பு பூஜை
திருவண்ணாமலை மாவட்டம், நாயுடுமங்கலம் பகுதியில் சாய்பாபா ஆலயத்தில் இன்று வியாழக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் , போளூர் அடுத்த நாயுடுமங்கலம் கிராமத்தில் உள்ள சாய்பாபா ஆலயத்தில் இன்று வியாழக்கிழமையை முன்னிட்டு காலை முதலே சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது . இதில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது .
Next Story
