ஸ்ரீகாசிவிஸ்வநாதா் ஆலயத்தில் சிறப்பு பூஜை

X
சிறப்பு பூஜை
அயோத்தி ராமா் கோயிலில் ஜனவரி 22ஆம்தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இக்கும்பாபிஷேகத்துக்கு குற்றாலம் பேரருவி புனிதநீா் தீா்த்தமாக அனுப்பி வைக்கப்படுகிறது. இந்தப் புனிதநீருக்கு தென்காசி அருள்மிகு ஸ்ரீகாசிவிஸ்வநாதா் ஆலயத்தில் சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னா் குற்றாலம் ஐந்தருவி விவேகானந்தா ஆசிரமம் சுவாமி அகிலாண்ட மகராஜ் ஆசியுடன் அயோத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில், நகர பாஜக தலைவா் மந்திரமூா்த்தி, துணைத் தலைவா் நாராயணன், நகா்மன்ற உறுப்பினா்கள் லட்சுமண பெருமாள், சங்கரசுப்பிரமணியன், பாஜக நிா்வாகிகள் ராஜ்குமாா், கருப்பசாமி, இந்து முன்னணி மாவட்ட துணைத் தலைவா் இசக்கிமுத்து, லட்சுமிநாராயணன், தளவாய், சபரிமணி, சுபாஷ், ஈஸ்வரன் ஆகியோா் கலந்து கொண்டனா்.
Next Story
