சோனியா காந்தி பிறந்த தினம் - கோயிலில் சிறப்பு பூஜை

சோனியா காந்தி பிறந்த தினம் - கோயிலில் சிறப்பு பூஜை

சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட நிர்வாகிகள்

உறுப்பினர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் 77-வது பிறந்த தினவிழா காங்கிரஸ் கட்சியின் சார்பில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் நடைபெற்றது. ராசிபுரம் ஸ்ரீநித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் நகர காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடைபெற்ற விழாவில் காங்கிரஸ் நகரத் தலைவர் ஸ்ரீராமுலு ஆர்.முரளி தலைமை வகித்தார். நாமக்கல் மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவரும், கட்சியின் பொதுக்குழு உறுப்பினருமான பாச்சல் ஏ.சீனிவாசன் முன்னிலை வகித்தார். இதில் சோனியா காந்தி பல்லாண்டு வாழ கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தினர். இதில் கட்சியின் நிர்வாகிகள் மதுரைவீரன் உள்ளிட்ட பலரும் பங்கேற்று பிராத்தனை நடத்தினர்.

Tags

Next Story