தூத்துக்குடி கோகுல கிருஷ்ணர் ஆலயத்தில் சிறப்பு பூஜை

தூத்துக்குடி கோகுல கிருஷ்ணர் ஆலயத்தில் சிறப்பு பூஜை

சிறப்பு பூஜையில் பங்கேற்றவர்கள்

ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள கோகுல கிருஷ்ணர் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் இன்று வெகு சிறப்பாக நடைபெறுகிறது. இதை ஒட்டி தமிழகத்தின் பல்வேறு ஆலயங்களில் பூஜைகள் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று வருகின்றன.

இதையொட்டி தூத்துக்குடியில் பங்களா தெரு பகுதியில் அமைந்துள்ள கோகுலகிருஷ்ணன் ஆலயத்தில் இன்று காலை சிறப்பு யாகசாலை பூஜை ஏற்பாடு செய்யப்பட்டு ராம பிரான் மற்றும் கிருஷ்ணருக்கு சங்காபிஷேகம் நடைபெற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து கோபூஜை நடைபெற்று ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ராமநாமம் ஜெபித்தபடி வழிபாடு நடத்தினர்

Tags

Next Story