சோனியாகாந்தி பிறந்தநாள் விழா - சிறப்பு பூஜை

சோனியாகாந்தி பிறந்தநாள் விழா - சிறப்பு பூஜை

சோனியாகாந்தி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு விநாயகர் ஆலயத்தில் சிறப்பு பூஜை

சங்ககிரியில் சோனியாகாந்தி பிறந்தநாள் விழா விநாயகர் ஆலயத்தில் சிறப்பு பூஜை
சேலம் மாவட்டம் சங்ககிரியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி பிறந்தநாள் விழா சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி பிறந்தநாளையொட்டி சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் சங்ககிரி, தெலுங்கர் தெரு பகுதியில் பழமைவாயந்த அருள்மிகு தில்லைவிநாயகர் கோவிலில் சுவாமிக்கு பல்வேறு திவ்ய பொருள்களைக்கொண்டு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.இதில் சோனியா காந்தி பெயருக்கு அர்ச்சனை செய்து மாவட்டத்தலைவர் ஜெய்குமார் தலைமையில் நிர்வாகிகள் சுவாமியை வழிப்பட்டனர். சங்ககிரி வட்டாரத் தலைவர் சரவணன், நகரத் தலைவர் ரவி, மாவட்ட நிர்வாகி சுப்ரமணியம், மாவட்ட பொது செயலாளர்கள் நடராஜன், காசிலிங்கம், ராமமூர்த்தி, சங்ககிரி ஊராட்சி ஒன்றிய குழு முன்னாள் துணைத் தலைவர் மணி, நிர்வாகிகள் இஸ்மாயில், அண்ணாமலை, ஆறுமுகம், லோகநாதன், கிரி,விஸ்வநாதன், பழனி, பரமன், தேவூர் கார்த்தி, இளைஞர் காங்கிரஸ் கார்த்தி, மாணவர் அணி அகில், வெப்ஸி, வெங்கட் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story