மார்கழி மாத அமாவாசை சிறப்பு பூஜை
சிறப்பு பூஜை
நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம், பழையபாளையம் ஏரிக்கரையில், சுமார் 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ அங்காளம்மன் திருக்கோயில் உள்ளது. நாமக்கல் மாவட்டம் மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் இருந்து திரளான பக்தர்கள் இக்கோயிலுக்கு தினசரி வருகை புரிந்து அம்மனை தரிசனம் செய்கின்றனர். மார்கழி மாத அமாவாசையை முன்னிட்டு ஸ்ரீ அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. பிறகு தங்க கவச அலங்காரத்தில் தரிசனம் தந்த ஸ்ரீஅங்காளம்மனை ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்து இருந்து வழிபட்டனர்.
பிறகு அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் நாமக்கல் நகர் மன்ற தலைவர் து.கலாநிதி மற்றும் நாமக்கல் மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் அருட்செல்வன் கலந்து கொண்டு அன்னதானத்தை துவக்கி வைத்தனர். இதற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர்கள், திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் அன்னதான உபயதாரர்கள் செய்து இருந்தனர்.