ஆங்கில புத்தாண்டு கோவில்களில் சிறப்பு பூஜை:
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு வையப்பமலை புதூர் புடவைக்காரி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு வையப்பமலை புதூர் புடவைக்காரி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
மல்லசமுத்திரம் ஒன்றியம், வையப்பமலை புதூரில் உள்ள புடவைகாரியம்மன் மற்றும் வீரகாரன் சுவாமி கோவிலில் நேற்று, ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, காலை 6 மணி முதல் மாலை வரையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. அதேபோல், வையப்பமலை மலை குன்றின் மீது அமர்ந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலிலும், சேலம்- நாமக்கல் மாவட்ட எல்லை பகுதியில் அமைந்துள்ள காளிப்பட்டி கந்தசாமி கோவிலிலும் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்
Tags
Next Story