முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை
கன்னியாகுமரி மாவட்டத்தில் தைப்பூசத்தை முன்னிட்டு முருகன் ஆலயங்களில் சிறப்பு பூஜை நேற்று முதல் நடைபெற்று வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தைப்பூசத்தை முன்னிட்டு முருகன் ஆலயங்களில் சிறப்பு பூஜை நேற்று முதல் நடைபெற்று வருகிறது. இன்று வரை தைப்பூசம் இருப்பதால் இன்று காலை நாகராஜா கோயிலில் தேரோட்டம் நடைபெறுகிறது.தைப்பூசத்தை முன்னிட்டு நேற்று காலை உவரி சுயம்புலிங்கம் கோயில் தேரோட்டம் நடைபெற்றது. இதற்காக குமரிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்றனர். நேற்று வந்த நாகர்கோவில் மண்டல போக்குவரத்து கழகம் சார்பில் திருச்செந்தூர், பழனிக்கு 50 சிறப்புகள் இயக்கப்பட்டது. குமரி மாவட்டத்தில் வெள்ளிமலை பாலமுருகன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது அங்கு ஏராளம் பக்தர்கள் சுவாமி தரிசனம் முடித்து அன்னதானம் நடைபெறும் பகுதிகளில் அமர்ந்திருந்தனர் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். வேளிமலை குமாரசுவாமி கோவிலிலும் இன்று வரை சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.
Next Story