வீரபத்திர ஆஞ்சநேயர் கோவிலில் தமிழ் மாத முதல் ஞாயிறு சிறப்பு பூஜை

X
வீரபத்திர ஆஞ்சநேயர் கோவிலில் தமிழ் மாத முதல் ஞாயிறு சிறப்பு பூஜை
திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்
நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் அழகராயபெருமாள் சுவாமி கோவில் வளாகத்தில் உள்ள, வீரபக்த ஆஞ்சநேயர் சுவாமிக்கு தமிழ்முதல் ஞாயிறு சிறப்பு பூஜை நடந்தது. மல்லசமுத்திரத்தில் இருக்கும் பழமை வாய்ந்த அழகசவுந்தரராஜ பெருமாள் கோவிலில் நேற்று, தமிழ்மாத முதல் ஞாயிறுதினத்தை முன்னிட்டு, பால், தயிர், பஞ்சாமிர்தம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு மூலிகை திரவியங்களை கொண்டு, காலை 6மணிக்கு அபிசேக ஆராதனை செய்யப்பட்டது. 54வடை மாலை சாற்றப்பட்டது. வெள்ளிகவசம் அணிவிக்கப்பட்டது. தனுர்மாதத்தை முன்னிட்டு, பெருமாள் சுவாமிக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டது. பெண்கள் நெய்தீபமிட்டு வழிபட்டனர். சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். அதேபோல், அளவாய்மலை ஆஞ்சநேயர் கோவிலிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. பிரசாதம் வழங்கப்பட்டது.
Tags
Next Story
