அவினாசி லிங்கேஸ்வரர் கோவிலில் மஹாசிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜை

அவினாசி லிங்கேஸ்வரர் கோவிலில் மஹாசிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜை

சிறப்பு அலங்காரத்தில் சுவாமி

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரியைமுன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள அவிநாசிலிங்கேசுவரர் கோயில் நாயன்மார்களால் பாடல் பெற்ற பெருமைக்குரிய தலமாகும். காசியில் வாசி அவிநாசி என்று காசிக்கு நிகராக போற்றப்படும் இக்கோவிலில் மகா சிவராத்திரி மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. பெண்கள் குழந்தைகள் என ஆயிரக்கணக்கானோர் தரிசனம் செய்தனர்.அவிநாசிலிங்கேஸ்வரர் திருக்கோவிலில் கருணாம்பிகை உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் உற்ச்சவர்களுக்கு முதல் கால பூஜையாக இரவு எட்டு முப்பது மணிக்கு 16 திரவியங்களில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து அலங்கார பூஜைகள் நடைபெற்றது. இரவு பத்து முப்பது மணியளவில் இரண்டாம் கால பூஜையும், நள்ளிரவு ஒரு மணிக்கு மூன்றாம் கால பூஜையும் அதிகாலை மூன்று முப்பது மணிக்கு நான்காம் கால பூஜை என நான்கு கால பூஜைகள் நடைபெறுகிறது. தொடர்ந்து நாளை காலை 7 மணிக்கு விளா பூஜை எனப்படும் உஷத்கால பூஜையும் நடைபெற உள்ளது.

பன்னிரு திருமுறை பாராயணத்துடன் மகாசிவராத்திரி பூஜை சிறப்பாக நடைபெற்றது. பரதநாட்டியம் உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

Tags

Next Story