அங்காளம்மனுக்கு சிறப்பு பூஜை

அங்காளம்மனுக்கு சிறப்பு பூஜை
X

அங்காளம்மனுக்கு சிறப்பு பூஜை

சங்ககிரி அருகே கல்வடங்கம் அங்காளம்மந் கோயிலில் நடைபெற்ற அம்மாவாசை சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட கல்வடங்கம் காவேரி ஆற்றங்கரை ஓரத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அங்காளம்மன் கோவிலில் மார்கழி மாத அமாவாசையையொட்டி அங்காளம்மனுக்கு அதிகாலை முதலே பால்,தயிர்,சந்தனம், திருமஞ்சனம்,பன்னீர்,இளநீர் பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திவ்ய திரவிய பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்ற பின்னர் வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு அருள்மிகு அங்காளம்மன் சுவாமியை வழிபட்டு சென்றனர்.

Tags

Next Story