ஸ்ரீ ஜெய் பராசக்தி ஆலயத்தில் உலக நன்மைக்காக பூஜை

ஸ்ரீ ஜெய் பராசக்தி ஆலயத்தில் உலக நன்மைக்காக பூஜை
X

சிறப்பு பூஜை

தூத்துக்குடியில் ஏற்பட்ட கனமழை வெள்ளத்தில் பொதுமக்கள் மீண்டு சகஜ நிலை திரும்பவும் உலக நன்மைக்காகவும் இயற்கை பேரிடர் ஆபத்தில் இருந்து பாதுகாத்திட ஸ்ரீ ஜெய் பராசக்தி ஆலயத்தில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
தூத்துக்குடியில் உள்ள கிராம தேவதை என அழைக்கப்படும் அருள்மிகு மேலூர் பத்திரகாளி அம்மன் கோவில் அருகே அமைந்துள்ளது. அருள்மிகு ஜெய் பராசக்தி ஆலயம் இந்த ஆலயத்தில் தினமும் காலை மாலை சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. மேலூர் பத்ரகாளியம்மன் கோவில் அறங்காவல குழு தலைவர் சைவத் திரு கீதா செல்வ மாரியப்பன் தலைமையில் நடைபெற்ற பூஜையில் தூத்துக்குடியில் ஏற்பட்ட கனமழை வெள்ளத்தில் பொதுமக்கள் மீண்டு சகஜ நிலை திரும்பவும் உலக நன்மைக்காகவும் இயற்கை பேரிடர் ஆபத்தில் இருந்து பாதுகாத்திட சிறப்பு பூஜை நடைபெற்றது. மேலும் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை இரவு சிறப்பு பூஜைகள் நடைபெறும் இந்த பூஜையில் வேலை வாய்ப்பு, திருமணம், குழந்தை வரம், கல்வி, நீங்காத நோய்கள், மற்றும் உலக நன்மைக்காகவும் சைவ சமய பாரம்பரிய படி பூஜைகள் நடைபெற்று வருகிறது. என சைவத் திரு கீதா செல்வ மாரியப்பன் தெரிவித்தார்.

Tags

Next Story