விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜை

விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜை

சங்கடஹர சதுர்த்தி

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த அம்மகளத்துார் செல்வ விநாயகர் கோவிலில் நடைபெற்ற சங்கடஹர சதுர்த்தி விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சின்னசேலம் அடுத்த அம்மகளத்துார் செல்வ விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா நடந்தது. நிகழ்ச்சியையொட்டி மூலவர் விநாயகருக்கு கணபதி ஹோமமும், தொடர்ந்து, பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிேஷகம் மற்றும் ஆராதனை நடந்தது.

பின், சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல், கள்ளக்குறிச்சி சக்தி விநயாகர் கோவிலில் மூலவர் விநாயகருக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story