தென்காசியில் கோவில்களில் தமிழ் புத்தாண்டு வழிபாடு

தென்காசியில்  கோவில்களில் தமிழ் புத்தாண்டு வழிபாடு
தென்காசியில் கோவில்களில் தமிழ் புத்தாண்டு வழிபாடு
தென்காசி சுற்றுவட்டார கோவில்களில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தென்காசி உலகம்மன் உடனுறை காசி விஸ்வநாதர் கோவில், குற்றாலம் குற்றாலநாதர் கோவில், இலஞ்சி திருவிலஞ்சி குமரன் கோவில், பண்பொழி திருமலை குமாரசுவாமி கோவில், ஆய்க்குடி பாலசுப்ரமணிய சுவாமி கோவில், பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவில், புளியரை தட்சிணாமூர்த்தி கோவில், குத்துக்கல்வலசை ஸ்ரீ பசி துஷ்ட கண்டராய விநாயகர் கோவில், முத்துமாரியம்மன் கோவில், அழகு நாச்சியம்மன் கோவில், காளியம்மன் கோவில், தென்காசி கடையம் சாலை தோரணமலை முருகன் கோவில் மற்றும் சுற்று வட்டார பகுதி கோவில்களில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாரணை நடைபெற்றது.

விசு கனி தரிசனம் நடைபெற்றது. இதனால் கோவில்களில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. ராயகிரி அருகே நாதகிரி அருள் மிகு ஶ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தமிழ் புத்தாண்டு முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி முருகப் பெருமானுக்கு 18, வகையான நறுமணப் பொருட்களால் மகாபிஷேம் செய்யப்பட்டு அலங்கார தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து சுவாமியை வழிபட்டனர்.

Tags

Next Story