காளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை

காளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை

சிறப்பு பூஜை 

திருவண்ணாமலை காளியம்மன் கோவிலில் இன்று வெள்ளிக் கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
திருவண்ணாமலையில் குரு தட்சிணாமூர்த்திக்கு எதிரில் அமைந்த காளியம்மன் கோவிலில் இன்று வெள்ளிக் கிழமையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அம்மனுக்கு எலுமிச்சை மாலை சாற்றப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு அர்ச்சனை செய்து, எலுமிச்சம் பழத்தில் நெய் விளக்கேற்றி சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story