முருகப்பெருமானுக்கு சிறப்பு அலங்காரம்

முருகப்பெருமானுக்கு சிறப்பு அலங்காரம்

முருகப்பெருமானுக்கு சிறப்பு அலங்காரம்

திருப்பத்தூரில் முருகப்பெருமானுக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேக, ஆராதனைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் நகரில் அமைந்துள்ள புராண சிறப்புமிக்க அருள்மிகு ஸ்ரீ சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ திருத்தளிநாதர் திருக்கோவிலில் தனி சன்னதி கொண்டு அருள் பாலிக்கும் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இக்கோவிலில் தனி சன்னதியில் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை தேவியர்களுடன் நின்ற நிலையில் அருள் பாலித்து வருகிறார். முருகப்பெருமானுக்கு தைப்பூச திருநாள் வரை தினமும் பல்வேறு வைபவங்கள் நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு நிகழ்வாக சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. முன்னதாக முருகப் பெருமானுக்கு திருமஞ்சன பொடி, மஞ்சள், பால், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பல வகையான நறுமணத் திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர் விபூதி காப்பு சாற்றி சர்வ அலங்காரம் செய்து தீப ஆராதனை காண்பிக்கப்பட்டன. தொடர்ந்து உதிரிப் பூக்கள் கொண்டு அர்ச்சனைகள் செய்து தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷங்கள் முழங்கி முருகப்பெருமானை வழிபாடு செய்தனர்.

Tags

Next Story