புனித வியாகுல அன்னை ஆலயத்தில் சிறப்பு பிராத்தனை

X
சிறப்பு பிராத்தனை
சாம்பல் புதன் என்ற விபூதி புதனோடு 40 நாட்கள் தவக்காலம் துவங்கியுள்ளது.
திண்டுக்கல் மேட்டுப்பட்டி புனித வியாகுல அன்னை ஆலயத்தில் சிறப்பு பிராத்தனை நடந்தது. சாம்பல் புதன் என்ற விபூதி புதனோடு 40 நாட்கள் தவக்காலம் துவங்கியுள்ளது. இதை தொடர்ந்து சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இந்த திருப்பலியின் நடுவே கிறிஸ்தவர்கள் தங்கள் நெற்றியில் திருநீறு பூசி வழிபடும் திருச்சடங்கு நடைபெற்றது. இதில் பாதிரியார் தாமஸ் உட்பட பலர் பங்கேற்றனர். பின்பு அனைவரும் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து 40 நாட்களும் இந்த தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடக்கும் என பாதிரியார் அறிவித்தார்.
Next Story
