பக்ரீத் பண்டிகையையொட்டி நாகூர் தர்காவில் சிறப்பு தொழுகை

பக்ரீத் பண்டிகையையொட்டி  நாகூர் தர்காவில் சிறப்பு தொழுகை

பக்ரீத் பண்டிகையையொட்டி நாகை மாவட்டம் நாகூர் தர்காவில் சிறப்பு தொழுகை நடந்தது.


பக்ரீத் பண்டிகையையொட்டி நாகை மாவட்டம் நாகூர் தர்காவில் சிறப்பு தொழுகை நடந்தது.

பக்ரீத் பண்டிகையையொட்டி நாகை மாவட்டம் நாகூர் தர்காவில் சிறப்பு தொழுகை நடந்தது இதில் திரளானோ இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். பக்ரீத் பண்டிகை இறைவனின் தூதரான இப்ராஹிம் நபிகளின் தியாகத்தை நினைவில் கூறும் வகையில் பக்ரீத் பண்டிகையை இஸ்லாமியர்கள் தியாக திருநாளாக கொண்டாடி வருகின்றனர். இந்த பண்டிகையன்று ஏழை எளிய மக்களுக்கு செம்மறி ஆடு, மாடு ஆகியவற்றை குர்பானி கொடுப்பது வழக்கம். சிறப்பு தொழுகை நாகை மாவட்டம் நாகூரில் உள்ள உலக பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்காவில் நேற்று பக்ரீத் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை நடந்தது.

இதில் திரளான இஸ்லாமியர்கள் கலந்து கொங்கு தொழுகை ஈடுபட்டனர். பக்ரீத் பண்டிகையையொட்டி இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். சிறுவர் சிறுமிகளும் புத்தாடை அணிந்து வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். நவாப் ஜாமியா மஸ்ஜித், காதிரிய்யா மதரஸா,திவான்ஷா பள்ளி தெரு பள்ளி, செய்யது பள்ளி,ஏழு லெப்பை ஜாமியா மஸ்ஜித் ,பாத்திமா பள்ளி, தோழை சாஹிப் தைக்கால், ஆகிய இடங்களிலும் இந்த சிறப்பு தொழுகை நடைபெற்றது.

Tags

Next Story