கீழக்கரையில் ஹஜ் பெருநாள் சிறப்பு தொழுகை

கீழக்கரையில்  ஹஜ் பெருநாள் சிறப்பு தொழுகை

பக்ரீத் சிறப்பு தொழுகை

கீழக்கரையில் அமைந்துள்ள 18 வாலிபர்கள் தர்கா திடலில் இஸ்லாமியர்களின் ஹஜ் பெருநாள் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் உலக மக்கள் அமைதிக்காகவும் சகோதரத்துக்காகவும் கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது.

இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகையான தியாகத் திருநாள் ( அரபில் ஈத் அல்-அழ்ஹா) அல்லது ஹஜ் பெருநாள் ஆகும். இறைத் தூதர் இப்ராகீம் நபியின் தியாகத்தை நினைவுகூரும் விதமாக ஒவ்வோர் ஆண்டும் இசுலாமிய நாட்காட்டியின் பன்னிரண்டாவது மாதமான துல் ஹஜ் மாதம் 10 ஆம் நாள் இது கொண்டாடப்படுகின்றது. வசதியுள்ள முஸ்லிம்கள், 'ஹஜ்' செய்வது என்பது, இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளில் ஐந்தாவது கடமையாகும். இது ஹஜ் மாதம் பத்தாம் நாள் நடைபெறும்.

மேலும் ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்ற பின் ஆரோக்கியமான ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை பலியிட்டுக் கொடுக்கப்படுகிறது. இந்த தியாகத் திருநாளின் ஒரு சிறப்பம்சம் இசுலாமியர்கள் தங்கள் வீட்டில் ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை இறைவனின் பெயரால் பலியிடுகின்றனர். பின்னர், அதன் இறைச்சியை மூன்று சம பங்குகளாகப் பிரித்து, ஒரு பங்கை அண்டை வீட்டார் மற்றும் நண்பர்களுக்கும், மற்றொரு பங்கை ஏழைகளுக்கும் கொடுத்துவிட்டு, மூன்றாவது பங்கை, தங்கள் தேவைகளுக்குப் பயன்படுத்துகின்றனர். நீ தொழுகையில் 500-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு உலக நன்மைக்காக கூட்டு பிரார்த்தனை செய்தனர்.

Tags

Next Story