விழுப்புரம் மாவட்டத்தில் சிறப்பு மதுவிலக்கு வேட்டை

விழுப்புரம் மாவட்டத்தில் சிறப்பு மதுவிலக்கு வேட்டை

விழுப்புரம் மாவட்டத்தில் சிறப்பு மதுவிலக்கு வேட்டையில் 165 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.


விழுப்புரம் மாவட்டத்தில் சிறப்பு மதுவிலக்கு வேட்டையில் 165 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் மெத்தனால் கலந்த விஷ சாராயத்தை குடித்தவர்களில் 50-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். 80-க்கும் மேற்பட்டோர், மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தின் எதிரொலியாக தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் சாரா யத்தை முற்றிலும் ஒழிக்கும் வகையில் போலீஸ் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபக் சிவாச் உத் தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார், சிறப்பு மதுவிலக்கு வேட்டை நடத்தினர்.

கடந்த 19, 20, 21 ஆகிய 3 நாட்களில் நடத்தப்பட்ட இந்த சோதனையின்போது சாராயம், மதுபாட்டில் கள், கள் ஆகியவற்றை விற்பனை செய்ததாக மொத்தம் 173 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதில் 165 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்து அவர்களிடமிருந்து 1,638 மதுபாட்டில்கள், 310 லிட்டர் சாராயம் மற்றும் 56 லிட்டர் கள் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.2 லட்சமாகும். மேலும் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து தீவிர மதுவிலக்கு வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.

Tags

Next Story