பொதுமக்கள் சிறப்பு குறைதீர்க்கூட்டம்

பொதுமக்கள் சிறப்பு குறைதீர்க்கூட்டம்

குறைதீர் கூட்டம்

திருவாரூரில் காவல்துறை சார்ப்பில் நடந்த பொதுமக்கள் சிறைப்பு குறைதீர் கூட்டத்தில் புகார் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.
எஸ்பி ஜெயக்குமார் உத்தரவின் படி திருவாரூர் உட்கோட்ட பொதுமக்களுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் திருவாரூர் கீழவீதி சாந்தி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. தமிழக முதல்வர் அலுவலகம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மூலமாக திருவாரூர் உட்கோட்டத்திற்கு வரப்பெற்ற புகார் மனுக்களின் மனுதாரர் மற்றும் எதிர் மனுதாரர்களை நேரடியாக வரவழைத்து அவர்களிடம் புகார் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டது. பொதுமக்களுக்கான சிறப்பு குறைதீர்க் கூட்டத்தில் எஸ்பி ஜெயக்குமார் கலந்துகொண்டு ஆய்வு செய்து தக்க அறிவுரைகள் வழங்கினார். அப்போது உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சிவராமன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story