சங்ககிரியில் அங்காளம்மனுக்கு சிறப்பு பூஜை
சிறப்பு அலங்காரத்தில் அம்மன்
சங்ககிரி கல்வடங்கம் அங்காளம்மன் கோவிலில் அம்மாவாசையையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.
சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட கல்வடங்கம் காவேரி ஆற்றங்கரை விவரத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அங்காளம்மன் கோவிலில் பங்குனி மாத அமாவாசையை யொட்டி அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், திருமஞ்சனம்,
பன்னீர்,இளநீர் உள்ளிட்ட பல்வேறு திவ்ய திரவிய பொருளை கொண்டு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்ற பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றது.
பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அருள்மிகு ஸ்ரீ அங்காளம்மன் வழிபட்டு சென்றனர்.
Next Story