விநாயகருக்கு சிறப்பு பூஜை
சிறப்பு பூஜை
திருவண்ணாமலை அக்னி தீர்த்த குளக்கரைக்கு அருகே உள்ள விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலையில் அக்னி தீர்த்த குளக்கரைக்கு எதிரில் உள்ள விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு இன்று விநாயகருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. விநாயகருக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கற்பூர தீபம் ஏற்றி விநாயகரை வழிபட்டனர். இதனைத் தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
Next Story