ஜோலார்பேட்டை பாச்சல் கிராமத்தில் ராமருக்கு சிறப்பு பூஜை

ஜோலார்பேட்டை பாச்சல் கிராமத்தில் ராமருக்கு சிறப்பு பூஜை
கோலபோட்டியில் பங்கேற்ற பெண்கள்
ஜோலார்பேட்டை பாச்சல் கிராமத்தில் ஸ்ரீ ராமருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பாச்சல் கிராமத்தில் ஸ்ரீ ராமருக்கு சிறப்பு பூஜை! கோல போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற ஊர் பெண்கள்! உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா பக்தி பரவச பெருவெள்ளத்துடன் நடைபெற்றது.

ராமர் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட ராமர் சிலைக்கு பிரதமர் மோடி முதல் பூஜை செய்தார். இந்நிலையில் இந்திய முழுவதும் ஸ்ரீ ராமருக்கு சிறப்பு பூஜைகள் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்றது.

இந்த நிலையில் அதே போல் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் கிராமத்தில் ஊர் தர்மகத்தா குமரேசன் தலைமையில் ஊர் பொதுமக்கள் முன்னிலையில் ஸ்ரீ ராமர் உருவ படத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அப்பகுதி கிராம பெண்களுக்கான கோலப் போட்டி நடைபெற்றது.

இந்த கோலப்பொட்டியில் பலரும் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். மேலும் அந்தக் கோல போட்டியில் ஸ்ரீராமர் உருவப்படத்தை வரைந்த மகாலட்சுமி என்ற பெண் முதல் பரிசை தட்டிச் சென்றார்.

மேலும் பகுதியில் கலந்து கொண்டு பெண்கள் மற்றும் பக்தர்கள் ஊர் பொதுமக்கள் என அனைவருக்கும் சிறப்பு பூஜையின் இறுதியில் அன்னதானம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story