கொங்கு கல்லூரி என்சிசி ஆர்மி பிரிவுக்கு சிறப்பு அங்கீகாரம்

கொங்கு கல்லூரி என்சிசி ஆர்மி பிரிவுக்கு சிறப்பு அங்கீகாரம்

விருது வழங்கல் 

சமூக சேவை மற்றும் என்.சி.சி நடவடிக்கைகளில் சிறப்பான பங்களிப்பை செய்ததற்காக கொங்கு பொறியியல் கல்லூரியின் என்சிசி ஆர்மி பிரிவுக்கு சிறப்பு அங்கீகாரம் வழங்கப்பட்டது.

துப்பாக்கி சுடும் இயக்ககத்திற்கு மாணவ மாணவியர்களை தேர்வு செய்வதற்காக விளையாட்டு துப்பாக்கி சுடும் முகாம் சிஏடிசி 2, பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியின் 15 (டீஎன்) பிஎன் என்சிசி மூலம் நடத்தப்பட்டது. இம்முகாமில் துப்பாக்கி சுடும் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் கோவை அணி முதலிடம் பிடித்தது. முகாம் நடவடிக்கைகளில் முன்மாதிரியான அர்ப்பணிப்பு மற்றும் திறமையை அங்கீகரித்து, கேடட் வசந்தரன் கே ஒட்டுமொத்த சிறந்த கேடட் (எஸ்டி) ஆகவும், கேடட் ஷரீன் டிலைடா டி ஒட்டுமொத்த சிறந்த கேடட்டாகவும் (எஸ்டபிள்யூ) தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேசிய மாணவர் படையின் துணை தலைமை இயக்குநர் கமடோர் அதுல் குமார் ரஸ்தோகி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

கல்லூரியில் புதுப்பிக்கப்பட்ட துப்பாக்கி சுடும் தளத்தை அவர் திறந்து வைத்தார்,. இது நிறுவனத்திற்குள் விளையாட்டு துப்பாக்கி சுடும் நடவடிக்கைகளை ஊக்குவிப்பதில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை உருவாக்கும். அவர் "எஸ்எஸ்பி தேர்வுகளை எப்படி எதிர்கொள்வது" என்ற உரையையும் நிகழ்த்தினார். விழாவின் போது, சமூக சேவை மற்றும் என்.சி.சி நடவடிக்கைகளில் சிறப்பான பங்களிப்புகளுக்காக கல்லூரியின் என்சிசி ஆர்மி பிரிவுக்கு சிறப்பு அங்கீகாரம் வழங்கப்பட்டது. கல்லூரியின் தாளாளர் .ஏ.கே.இளங்கோ, முதல்வர், முனைவர்.வீ.பாலுசாமி, பதிவாளர் முனைவர்.பி.பாலசுப்பிரமணி, கோவை குழும கமாண்டர், கர்னல் பி.வி.எஸ்.சிவராவ், கேம்ப் கமாண்டன்ட், மேஜர் சுரேஷ்குமார் மற்றும் ராணுவ மற்றும் விமானப்படை அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story