சேலம் மாநகராட்சியின் சிறப்பு வரி வசூல் முகாம்கள்
மாநகராட்சி கமிஷனர்
நடப்பு 2023-2024-ம் நிதியாண்டின் 2- ம் அரையாண்டு வரையிலான காலத்தில் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, காலியிடவரி, தொழில்வரி மற்றும் குடிநீர் கட்டணம் மற்றும் வரியில்லா இனங்கள் முதலியவற்றை செலுத்த ஏதுவாக பொது மக்கள் வசதி கருதி நாளை 11-ந் தேதியன்று சிறப்பு வரிவசூல் முகாம்கள் நடைபெற உள்ளதாக சேலம் மாநகராட்சி கமிஷனர் பாலச்சந்தர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சேலம் மாநகராட்சி கமிஷனர் தெரிவித்துள்ளதாவது :- சூரமங்கலம் மண்டலத்திற்குட்பட்ட கோட்டம் எண் 3-ல் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, குரங்குசாவடி வார்டு அலுவலகத்திலும், கோட்டம் எண் 25-ல் பள்ளப்பட்டி கூட்டுறவு சொசைட்டி வளாகம் மற்றும் அஸ்தம்பட்டி மண்டலத்திற்குட்பட்ட கோட்டம் எண்.17-ல் உள்ள அழகாபுரம் வார்டு அலுவலகத்திலும் கோட்டம் எண். 30-ல் அச்சுராமன் தெருஅங்கன்வாடி மையத்திலும் மற்றும் அம்மாப்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட கோட்டம் எண்.32 மற்றும் 33-ல் பாவடி பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும்,
மற்றும் கொண்டலாம்பட்டி மண்டலத்திற்குட்பட்ட கோட்டம் எண் 45-ல் பாலசுப்ரமணியம் திருக்கோவில் ஓபுளிச்செட்டித்தெரு மற்றும் கோட்டம் எண்.51 மற்றும் 52-ல் மணியனூர் அம்மா உணவக வளாகத்திலும் சிறப்பு வரிவசூல் முகாம்கள் நடைபெற உள்ளது.
மேலும் நாளை 11-ந் தேதி ஞாயிற்று கிழமை அனைத்து வரிவசூல் மையங்களும் வழக்கம் போல் காலை 9 மணி முதல் மாலை 4.00 மணி வரை செயல்படும். எனவே பொது மக்கள் இவ்வசதியினை பயன்படுத்தி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டியவரி மற்றும் வரியில்லா இனங்களை செலுத்தலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.