உயிரிழப்புகளை தடுக்க காவல்துறை சார்பில் தனிக்குழு

உயிரிழப்புகளை தடுக்க காவல்துறை சார்பில் தனிக்குழு

கோவையில் உயிரிழப்புகளை தடுக்க காவல்துறை சார்பில் தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

கோவையில் உயிரிழப்புகளை தடுக்க காவல்துறை சார்பில் தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் கடந்த ஆண்டு எடுக்கபட்ட நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது பேசிய அவர் கடந்த 2023ம் ஆண்டு கோவை மாவட்ட காவல் துறை சார்பில் லைப் கார்டு,பிராஜக்ட் பள்ளிக்கூடம்,பள்ளிக்கூடம்2.0,மிஷன் கல்லூரி, அதிநவீன சிசிடிவி கட்டுப்பாட்டு அறை என பல்வேறு திட்டங்களை துவங்கி செயல்படுத்தி வருவதாக கூறினார். மேட்டுபாளையம் பகுதியில் உள்ள பவானி ஆற்றில் சுற்றுலா பயணிகள் உயிரிழக்கும் சம்பவங்களை தடுக்கும் வகையில் கடந்த 2023 பிப்வரி மாதம் "லைப் கார்டு" என்ற பெயரில் மாவட்ட காவல் துறை சார்பில் 10 பேர் கொண்ட தனிக்குழு அமைக்கப்பட்டதாகவும் இந்த குழுவினர் கடந்த 2023 ல் மட்டும் ஆற்றில் தவறி விழுந்த 700 பேரை காப்பாற்றியுள்ளதாக கூறியவர் தற்கொலைக்கு முயன்ற 11 பேரை காப்பாற்றியுள்ளதாக தெரிவித்தார்.கடந்த ஆண்டில் மட்டும் புரோஜெட் பள்ளிகூடம் மூலம் 1.40 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு அளித்துள்ளதாகவும் முப்பத்தைந்து பள்ளிகளை சேர்ந்த 1,500 மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி வழங்கப்பட்டுள்ளது என்றார்.

கோவை மாவட்டத்தில் மொத்தம் பதினோராயிரம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளதாகவும் ஒரே ஆண்டில் 1950 கேரமாக்கள் பொருத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.கடந்த ஆண்டு 449 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 590 கைது செய்யப்பட்டு 742 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளனர் என்றவர் கல்லூரி மாணவர்கள் கொடுத்த தகவல் அடிப்படையில் மட்டும் 189 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றார்.பள்ளி மற்றும் கல்லூரி அருகே குட்கா பொருட்கள் விற்பனை செய்யும் 74 கடைகள் அகற்றப்பட்டுள்ளது எனவும் எச்சரிக்கையை மீறி குட்கா பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட 120 கடைகள் சீல் வைக்கப்பட்டுள்ளது என்றார்.கடந்த ஆண்டு மட்டும் 47 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் ஐந்து கொலைகள்,ஆதாய கொலை வழக்குகளில் 79 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.

100 சதவீதம் வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் கொலை வழக்குகளில் 89 சதவீத வழக்குகளில் குற்றவாளிகளை 24 மணி நேரத்தில் கைது செய்துள்ளதாக கூறியவர் அதிகபட்சமாக மூன்று நாட்களில் கொலை குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.மாவட்டம் முழுவதும் 1558 பேருக்கு பிணையில் வெளிவராத வாரண்ட் நீதிமன்றம் மூலம் பெற்றுள்ளாதாகவும் இந்த ஆண்டு விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் பத்து சதவீதம் குறைந்துள்ளது என்றார். சைபர் கிரைம் மூலம் ரூ.24 கோடியை பொதுமக்கள் இழந்துள்ளனர் எனவும் மர்ம நபர்களின் வங்கி கணக்கில் இருந்த 31 கோடி முடக்கம் செய்யப்பட்டுள்ளது என்றார். பள்ளிகளில் நடத்தும் விழிப்புனர்வு நிகழ்சி மூலம் 15 போக்ஸோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதாக ரூ,4.5 கோடி அபராதம் விதிக்கபட்டுள்ளது என்றார்.

மேட்டுபாளையம் பகுதியில் உள்ள பவானி ஆற்றில் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க காவல் துறை சார்பில் விரைவில் மின் அறிவிப்பு இயந்தரம் பொருத்த உள்ளதாக கூறியவர் தற்போது கண்டறியப்பட்டுள்ள 19 இடத்தில் இந்த கருவிகளை பொருத்தி பவானி ஆற்றில் நீர் திறக்கும் போது முன்கூட்டிய அலாரம் ஒளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.மேலும் பவானி ஆற்றக்கரையில் மீட்பு பணிகாக பணியமர்த்தபட்ட காவலர்களுக்கு சிறப்பு நீச்சல் உடை வடிவமைக்கப்பட்டு உள்ளதாகவும் விரைவில் அவை வழங்க உள்ளதாக தெரிவித்தார்.

Tags

Next Story