வனத்துறை களப்பணியாளர்களுக்கு சிறப்பு பயிற்சி

வனத்துறை களப்பணியாளர்களுக்கு  சிறப்பு பயிற்சி

பயிற்சி வகுப்பு 

கொடைக்கானலில் யானை மனிதன் முரண் மிகுந்த பகுதிகளில் பணியாற்றும் வனத்துறை களப்பணியாளர்களுக்கு கால்நடை மருத்துவர்கள் ம‌ற்றும் தன்னார்வலர்களால் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வனக்கோட்டத்திற்கு உட்பட்டு 7 வனச்சரகங்கள் உள்ளன,இந்த வனச்சரகங்களில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் முகாமிட்டு விவசாய பயிர்களையும், விளைநிலங்களையும் சேதப்படுத்துவதுடன் பொதுமக்களையும் அச்சுறுத்தி வருகிறது, இந்நிலையில் யானை மனிதன் முரண் மிகுந்த பகுதிகளில் பணியாற்றும் வனத்துறை களப்பணியாளர்களுக்கு ஒரு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது,

இந்த பயிற்சிக்கு பல வருடங்களாக பணியாற்றிய கால்நடை மருத்துவர்கள், தன்னார்வலர்கள்,விலங்கின ஆர்வலர்கள் உள்ளிட்டோர் பயிற்சி அளித்ததுடன் காணொலி காட்சி மூலம் புரியும் வ‌ண்ண‌ம் எடுத்துரைத்தனர், இதில் குறிப்பாக‌ காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வெடி பொருட்கள் சத்தம் இல்லாமல் யானைகளை அமைதியான முறையில் விரட்டும் வழிமுறைகள் குறித்தும் வருடம் முழுவதும் யானைகள் வரும் இடங்களை கண்காணித்து அதன் மூலம் பொதுமக்களையும்,விளை நிலங்களையும் பாதுகாப்பது குறித்தும் விவ‌ரித்த‌ன‌ர்.

மேலும் யானைகளுக்கு மிகவும் பிடித்த உணவு புற்கள் என்றும், வனப்பகுதிகளில் இருந்த புற்கள் மீது களைசெடிகள் வளர்ந்துள்ளதால் உணவு சங்கிலி பாதிக்கப்பட்டதாகவும், மேலும் வனப்பகுதிக்குள் செல்லும் வனப்பணியாளர்கள் கவனம் சிதறாமல் பாதுகாப்புடன் சென்று வர வேண்டும் என அறிவுரை வ‌ழ‌ங்கிய‌துட‌ன், கொடைக்கானல் வனக்கோட்டத்தில் கடந்த 2018 ஆம் வருடம் 18 யானைகள் இருந்ததாகவும், தற்போது 48 யானைகள் இருப்பதாகவும் விலங்கின ஆர்வலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர், யானைகளின் புகைப்படங்கள் காட்சிபடுத்தப்பட்டு தந்தம்,முதுகு எலும்பு,யானை வால் உள்ளிட்ட யானைகளின் குணாதிசயங்கள் குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இந்நிகழ்வில் வனச்சரகர்கள்,வனப்பணியாளர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வனப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்...

Tags

Next Story