இடையங்குளத்தூர் ஊராட்சியில் கால்நடை சிறப்பு மருத்துவ முகாம்
கால்நடை சிறப்பு மருத்துவ முகாம்
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டுஅடுத்த இடையங்குளத்தூர் ஊராட்சியில் திருவண்ணாமலை கால்நடை பராமரிப்பு துறையின் சார்பாக கால்நடை சிறப்பு மருத்து முகாம் நடைபெற்றது முகாமை ஊராட்சி மன்ற தலைவர் சங்கர் தொடங்கி வைத்தார்.கால்நடை மருத்துவர் ஆரிப் மற்றும் கால்நடை உதவியாளர்கள் கலந்து கொண்டு முகாமில் 400 கால்நடைகளுக்கு தடுப்பு ஊசி குடற்புழு நீக்கம்,200 பசுவிற்கு சினை ஊசி13 பசுக்கு மலடி நீக்கம் பணி மேற்கொள்ளப்பட்டது
மேலும்120 கோழிக்கு கழிச்சல்தடுப்பூசி, 4 நாய்க்குவெறி நாய் கடி தடுப்பூசி மற்றும் பல்வேறு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது இடையங்குளத்தூர் இதனை சுற்றியுள்ள 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
கால்நடை மருத்துவமனை மருத்துவர் ஆலோசனைப்படி கால்நடைகளைசிறப்பாக பராமரிப்பு செய்த விவசாயிகளுக்குஊராட்சி மன்ற தலைவர் சங்கர் பரிசுவ ழங்கினார் பட விளக்கம் சேத்துப்பட்டு அடுத்த இடையன்குளத்தூர் ஊராட்சியில் நடைபெற்ற கால்நடை சிறப்பு மருத்துவ முகாமில் மருத்துவர் ஆரிப் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தார்