கிராம ஊராட்சிகளில் சமூக தணிக்கை சிறப்பு கிராமசபை கூட்டம்

கிராம ஊராட்சிகளில் சமூக தணிக்கை சிறப்பு கிராமசபை கூட்டம்

கிராம சபைக்கூட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் 67 கிராமஊராட்சிகளில் சமூகதணிக்கை சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் 67 கிராம ஊராட்சிகளில் கடந்த 4ம்தேதி முதல் 7ம் தேதி வரை சமூகத்தணிக்கை நடந்தது. கிராம வள பயிற்றுநர்கள் சமூகத் தணிக்கையின் போது தயார் செய்த அறிக்கை கிராம சபை கூட்டத்தில்ஒப்புதல் பெறப்பட்டது. ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் பசுவந்தனை கிராம ஊராட்சியில் நடந்த சமூகத் தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டத்திற்கு கூட்டத் தலைவர் முருகன் தலைமை வகித்தார்.

ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமிசிதம்பரம்,துணைத் தலைவர் ராமுத்தாய் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலர் வேல்முருகன் அனைவரையும் வரவேற்றார். ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய சமூகத்தணிக்கை வட்டார வள பயிற்றுனர் முத்து முருகன் கலந்து கொண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் குறித்து பேசினார். கிராமவளபயிற்றுனர் செண்பகவல்லி சமூகத் தணிக்கை அறிக்கை வாசித்தார்.

கூட்டத்தில் சமூகத் தணிக்கை அறிக்கை குறித்து விவாதிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் கிராமசபை பற்றாளர் இமானுவேல்,கிராம வளபயிற்றுநர்கள் மல்லிகா,நாகலட்சுமி.அமலஜோதி,கோமதி உள்பட பணித்தள பொறுப்பாளர்கள்,மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.பணித்தள பொறுப்பாளர் சுப்புலட்சுமி நன்றி கூறினார்.இதேபோல் 12 ஊராட்சி ஒன்றியங்களிலும் 67 கிராம ஊராட்சிகளில் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.

Tags

Next Story