சிறப்பு கிராம சபை கூட்டம் : உறுதிமொழி ஏற்பு
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியத்துக்கு உட்பட்ட அமாணி மல்லாபுரம் ஊராட்சி, குட்டசந்து மாரியம்மன் கோயில் வளாகத்தில் சுற்றுபுற தூய்மை குறித்து சிறப்பு கிராமசபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் மதிவாணன், தலைமையில் இன்று நடைப்பெற்றது.
கூட்டத்திற்க்கு உதவி திட்ட அலுவலர் தமிழரசன், வட்டார வளர்ச்சி அலுவலர் சுருளி நாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், இணையவழி வீட்டு வரி, சொத்துவரி செலுத்துதல், . பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்துதல், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துதல், டெங்கு கொசு ஒழிப்பு, சுற்றுப்புற சுகாதாரத்தை தூய்மையாக வைத்து கொள்ளுதல் ஆகியன குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
8அதனை தொடர்ந்து கிராம மக்கள் மற்றும் அதிகாரிகள் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்போம், மஞ்சப்பை பயன்படுத்துவோம், மலம் கழிப்பதை தவிர்த்து கழிவறையை பயன்படுத்துவோம் என உறுதி மொழி ஏற்றனர். கூட்டத்தில் கால்நடைத்துறை,வேளாண்மைத்றை, சுகதார துறை உள்ளிட்ட துறை அதிகாரிகள், வட்டார ஒருங்கிணைப்பாளர் அருள்மணி, வார்டு கவுன்சிலர்கள், ஊராட்சி செயலாளர் பெருமாள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.