ஆஞ்சேநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு

குமாரபாளையம் உள்ள பழமையான ஆஞ்சேநேயர் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அர்ச்சகர் நியமிக்கப்பட்ட நிலையில், கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகர் பாலக்கரை பகுதியில் பல நூற்றாண்டு பழமையான அப்புராயர் சத்திரம் என்ற இடம் உள்ளது. இங்கு மன்னர் கிருஷ்ணதேவராயர் குதிரைகள் கட்டி, இளைப்பாறி உள்ளார் எனவும், இங்குள்ள ஆஞ்சநேயர் கோவிலில், பல மன்னர்கள் சுவாமியை வணங்கியுள்ளனர் எனவும் கூறப்படுகிறது. சிதிலமடைந்த இந்த கோவிலில் தற்போது இந்துசமய அறநிலையத்துறை சார்பில், அர்ச்சகர் நியமனம் செய்யப்பட்டு, பூஜைகள் நடந்து வருகிறது.

நேற்று இரவு அமாவாசை தினத்தையொட்டி, அப்பகுதி ஆஞ்சநேய பக்தர்கள் குழு சார்பில், சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் சுவாமிக்கு நடத்தப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் நிர்வாகிகள் பரமசிவம், சிவகுமார், ஆறுமுகம், கிருஷ்ணமூர்த்தி, பழனிவேல், நேசமணி, லட்சுமி, ஜெகதாம்பாள், ஜான்ஸ்ராணி, விஜயாமணி உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story