விநாயகர் மற்றும் பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு

விநாயகர் மற்றும் பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
சிறப்பு பூஜை
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் விநாயகர், பெருமாள் கோவில்களில் நடைப்பெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் விநாயகர், பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. ராமநவமி விழாவையொட்டி குமாரபாளையம் விட்டலபுரி, பாண்டுரங்கர் கோவிலில் தினமும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. ராமர், சீதை கொலு வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது. நேற்று சித்திரை சனிக்கிழமை நாளையொட்டி, பக்தி பாடல்கள் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. அக்ரஹாரம் லட்சுமி நாராயண சுவாமி கோவில், தட்டான்குட்டை ஜெய்ஹிந்த் நகர் புருஷோத்தம பெருமாள் கோவில், கள்ளிப்பாளையம் பெருமாள் கோவில் உள்ளிட்ட பல பெருமாள் கோவில்களில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன.

சங்கடஹர சதுர்த்தியையொட்டி, ராஜவிநாயகர் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடந்தன. நடனவிநாயகர் கோவில், சவுண்டம்மன் கோவில்கள், அங்காளம்மன் கோவில், திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை கோவிலில் உள்ள கல்யாண விநாயகர் கோவில், கள்ளிபாளையம் விநாயகர் கோவில் உள்ளிட்ட பல கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன.

Tags

Next Story