கோட்டை மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு !

கோட்டை மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு !

கோட்டை மாரியம்மன் கோவில்

சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் நாளை (செவ்வாய்க்கிழமை) சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடக்கிறது.

சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் நாளை (செவ்வாய்க்கிழமை) சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடக்கிறது. காலை 11 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மதியம் 1 மணிக்கு அன்னதானம், மாலை 4 மணிக்கு திருவிளக்கு பூஜை நடக்கிறது.

தொடர்ந்து இரவு 7 மணிக்கு தங்க ரத புறப்பாடு, பக்திபாடல் இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் இரவு 7.45 மணிக்கு ஊஞ்சல் உற்சவம், இரவு 8 மணிக்கு திருவருட்பிரசாதம் வழங்குதல் உள்ளிட்டவை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் என்.டி.என்.சக்திவேல், செயல் அலுவலர் ஜி.அமுதசுரபி, ஆகியோர் செய்துள்ளனர்.

இதுகுறித்து கோவில் அறங்காவலர் குழு தலைவர் எஸ்.டி.என்.சக்திவேல் கூறுகையில், கோட்டை மாரியம்மன் கோவிலில் நாளை (23-ந் தேதி) நடைபெறும் சித்ரா பவுர்ணமி சிறப்பு வழிபாட்டில் ஊஞ்சல் உற்சவம் மற்றும் திருவிளக்கு பூஜை நடக்கிறது. இதில் கலந்து கொண்டால் தீர்க்க முடியாத பிரச்சினைகள் தீரும். திருமண காரியம் கைகூடும்.

குழந்தை பாக்கியம் கிடைக்கும். கல்வி, உடல் ஆரோக்கியம், தொழில் வளர்ச்சி, குடும்ப ஒற்றுமை ஏற்படும். கடன் தொல்லைகள் நீங்கும். சகல காரியங்களும் நன்மையாக நடக்கும். மேலும் மழை வேண்டியும் சிறப்பு பூஜை நடக்கிறது. எனவே பக்தர்கள் சித்ரா பவுர்ணமி பூஜையில் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற அன்புடன் அழைக்கிறோம் என்றார்.

Tags

Next Story