முஞ்சிறை மகாதேவர் கோவிலில் சிறப்பு வழிபாடு

முஞ்சிறை மகாதேவர் கோவிலில் சிறப்பு வழிபாடு
X
முஞ்சிறை மகாதேவர் கோவில்
முஞ்சிறை திருமலை மகாதேவர் கோயில் வரலாற்று சிறப்பு மிக்க 12 சிவாலயங்களில் முதல் ஆலயமாகும். இந்த கோயிலில் ஏராளமான பக்தர்கள் தினமும் வந்து சிவபிரானை தரிசித்து செல்வது வழக்கம். ஆண்டுதோறும் கார்த்திகை அஷ்டமியன்று சிவபிரானுக்கு உட்பிரகார மண்டபத்தில் உணவு படைப்பது வழக்கம். இதனால் ஏராளமான மக்கள் அன்றைய தினம் வந்து சிவபிரானை தரிசித்து செல்வார்கள். இதைத் தொடர்ந்து இவர்களுக்கு அன்னதான நிகழ்வு நடக்கும். இதையொட்டி நேற்று மகாதேவருக்கு லட்சாச்சனை வழிபாடு, விபூதி அபிஷேகம் போன்றவை நடைபெற்றது. நிகழ்ச்சியில் சுற்று வட்டார பகுதி பக்தர்கள் ஏராளம் பேர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story