ராமலிங்கம்பட்டி பாதாள செம்பு முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு
பாதாள சொம்பு முருகன் கோயில்
இராமலிங்கம்பட்டி கிராம மக்கள் விரதம் இருந்து 50க்கும் மேற்பட்ட தீர்த்த குடங்களுடன் ஆடி பாடி ஊர்வலமாக வந்து பாதாள செம்பு முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தனர்.
வைகாசி விழாவை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் காமாட்சிபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட இராமலிங்கம்பட்டி கிராம மக்கள் விரதம் இருந்து காப்பு கட்டி வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி அளவில் 50க்கும் மேற்பட்ட மக்கள் தீர்த்த குடங்களுடன் தாரை தப்பட்டை முழங்க பட்டாசு வெடித்து ஆடி பாடி ஊர்வலமாக வந்து இராமலிங்கம்பட்டியில் அமைந்துள்ள பாதாள செம்பு முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபாடு செய்தனர்.
இராமலிங்கம்பட்டி ஊர் முக்கியஸ்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பாக மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் பாதாள செம்பு முருகன் கோவில் நிர்வாகம் சார்பாக இராமலிங்கம்பட்டி கிராம மக்கள் 300க்கும் மேற்பட்டோருக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story