பெரம்பலூரில் தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு.

பெரம்பலூரில் தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு.

கேக் வெட்டி கொண்டாடிய இளைஞர்கள்

பெரம்பலூரில் தேவாலயங்களில் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

2024-ம் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு, பெரம்பலூர் நகரில் சிறுவர்கள் இளைஞர்கள், பொதுமக்கள், அவர்கள் வசிக்கும் பகுதியில் கேக் வெட்டி பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள்.

இதனை தொடர்ந்து பெரம்பலூர் பழைய பேருந்து அருகே ஆத்தூர் சாலையில் உள்ள CSI சர்ச். துறையூர் சாலையில் உள்ள புனித பனிமய மாதா சர்ச் மற்றும் வெங்கடேசபுரம் பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் திருப்பலி நடைபெற்றது.

மேலும் புனித பனிமயமாதா தேவாலயத்தில் அருட்தந்தை தைனீஸ் ஆரோக்கியசாமி, பெரம்பலூர் பங்குத்தந்தை ராஜமாணிக்கம் ஆகியோர் சிறப்பு திருப்பள்ளி நடத்தி வைத்தனர் இதில் திரளான கிறிஸ்தவர்கள் தேவாலயத்தில் புத்தாண்டு வழிபாடு நடத்தினார்கள்.

மேலும் அரசின் உத்தரவுப்படி இரவு நேரங்களில் பொதுமக்கள், சிறுவர்கள், இளைஞர்கள் தங்கள் இருப்பிடத்திலிருந்து புத்தாண்டை கேக் வெட்டி கொண்டாடி அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.

Tags

Next Story