விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு

விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு

 ராஜவிநாயகர்

குமாரபாளையம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விநாயகர் கோவில்களில் சதுர்த்தியை முன்னிட்டு நடந்த சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சதுர்த்தியையொட்டி முன்னிட்டு விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.சதுர்த்தியையொட்டி, உடையார்பேட்டை, ராஜவிநாயகர் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடந்தன. நடனவிநாயகர் கோவில், சவுண்டம்மன் கோவில்கள், அங்காளம்மன் கோவில், திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை கோவிலில் உள்ள கல்யாண விநாயகர் கோவில், கள்ளிபாளையம் விநாயகர் கோவில் உள்ளிட்ட பல கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன.

Tags

Next Story