நாகப்பட்டினம் : அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
தமிழ் புத்தாண்டு சிறப்பு பூஜை
சித்திரை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர்.தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திருமருகல் ஒன்றிய பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. திட்டச்சேரி வெள்ளத்திடல் மகாமாரியம்மன் கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அம்மனுக்கு பால், பன்னீர்,இளநீர்,தயிர்,சந்தனம், குங்குமம், மாப்பொடி,திரவிய பொடி உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேக செய்யப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டது.
இதில் திரளான பெண் பக்தர்கள் கலந்து கொண்டு மாவிளக்குபூஜை செய்து சாமி தரிசனம் செய்தனர்.அதேபோல் திருமருகல் செல்லியம்மன் கோவில்,மாரியம்மன் கோவில், வாழ்மங்கலம் மழைமாரியம்மன் கோவில்,வெள்ளத்திடல் காளியம்மன் கோவில், சீயாத்தமங்கை கால பைரவர் கோவில்,கட்டலாடி பாதாள காளியம்மன் கோவில்,திருக்கண்ணபுரம் மாரியம்மன் கோவில்,ஆதீனங்குடி மாரியம்மன் கோவில், அம்பல் மாரியம்மன் கோவில்,பொறக்குடி மாரியம்மன் கோவில் உள்ளிட்ட அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.