திருவெண்காடு கோவிலில் துர்கா ஸ்டாலின் சிறப்பு வழிபாடு

திருவெண்காடு கோவிலில் துர்கா ஸ்டாலின்  சிறப்பு வழிபாடு

துர்கா ஸ்டாலின் பால் குடம் எடுத்து வழிபாடு 

மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு கோவிலில் துர்கா ஸ்டாலின் பால்குடம் எடுத்து சிறப்பு வழிபாடு செய்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் ,சீர்காழி தாலுக்கா, திருவெண்காடு கிராமத்தில் தேவார பாடல் பெற்ற பிரம்ம வித்யாம்பிகை சமேத, சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் நவகிரகங்களில் புதன் ஸ்தலமாக விளங்கி வருகிறது. அகோரமூர்த்தி தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். அகோர மூர்த்திக்கு ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும், சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். இத்தகைய சிறப்புமிக்க அகோர மூர்த்தி திருநாளான்று கோவிலுக்கு வந்த தமிழக முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் சூரிய தீர்த்தத்தில் இருந்து பால்குடம் எடுத்து கோவிலை வலம் வந்து, அகோர மூர்த்திக்கு அபிஷேகம் செய்வித்தார், தொடர்ந்து, துர்கா ஸ்டாலின் சுவாமி அம்பாள் மற்றும் புதன் பகவான் சன்னதிக்கு சென்று வழிபாடு நடத்தினார். இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மோகனசுந்தரம், செயல் அலுவலர் முருகன், உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். துர்கா ஸ்டாலின் வருகையை முன்னிட்டு, ஏராளமான போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags

Next Story