கீழ்பெண்ணாத்தூர் அருகே அஷ்டமியையொட்டி, சிறப்பு வழிபாடு

கீழ்பெண்ணாத்தூர் அருகே அஷ்டமியையொட்டி, சிறப்பு வழிபாடு

கீழ்பெண்ணாத்தூர் அருகே ஜமீன் கூடலூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீமகா காலபைரவர் கோயிலில், தேய்பிறை அஷ்டமியையொட்டி,சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

கீழ்பெண்ணாத்தூர் அருகே ஜமீன் கூடலூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீமகா காலபைரவர் கோயிலில், தேய்பிறை அஷ்டமியையொட்டி,சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பெண்ணாத்தூர் அடுத்த வேட்டவலத்தை அடுத்த ஜமீன் கூடலூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீமகா காலபைரவர் கோயிலில், பங்குனி மாத தேய்பிறை அஷ்டமியையொட்டி, சிறப்பு வழிபாடு, 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி, காலை 6 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை, 11 மணிக்கு 108 சங்காபிஷேகம், 108 மூலிகைகள் மற்றும் மட்டை தேய்காய் கொண்டு சிறப்பு யாகம், பிரபஞ்ச தியானப் பயிற்சி ஆகியவை நடைபெற்றன.

பிற்பகல் ஒரு மணிக்கு காலபைரவருக்கு பால், பன்னீர் சந்தனம், இளநீர் ஆகியவற்றை பயன்படுத்தி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய கால பைரவரை திரளான பக்தர்கள் தரிசித்தனர். பக்தர்களுக்கு கோயில் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Read MoreRead Less
Next Story