பென்னாகரத்தில் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு சிறப்பு வழிபாடு

பென்னாகரத்தில் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு சிறப்பு வழிபாடு

சிறப்பு தொழுகை

பென்னாகரம் ஒகேனக்கல் சாலையில் அமைந்துள்ள ஈத்கா மைதானத்தில் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடைப்பெற்றது.

இஸ்ஸலாமியர்கள் பென்னாகரத்தில் தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகையான இன்று ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து பென்னாகரம் ஒகேனக்கல் சாலையில் அமைந்துள்ள ஈத்கா மைதானத்தில் தொழுகையில் ஈடுபட்டனர். தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் இஸ்லாமியர்களுக்கான பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஜாமியா மஸ்ஜித் சுன்னத் முத்தவல்லி பி எம் தவுலத் பாஷா தலைமையில் ஈத்கா மைதானத்தில் இறைத்தூதரான இஸ்மாயில் நபியின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

மேலும் குர்பானி கறி கொடுக்க இயலாத ஏழை எளிய இஸ்லாமியர்களுக்கு குருபானி கொடுக்கும் நாள் பக்ரீத் திருநாளாகும். பக்ரீத் பண்டிகையில் இஸ்லாமியர்கள் அதிகாலை முதலே புத்தாடை அணிந்து தொழுகை முடிந்தவுடன் உறவினர்கள் நண்பர்கள் கட்டிப்பிடித்து தழுவி பக்ரீத் வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர்

Tags

Next Story