சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு

சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு

சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு

சிவகங்கையில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
சிவகங்கை நகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே எதிரே அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஶ்ரீ சித்தி விநாயகர் திருக்கோவிலில் மார்கழி மாத சங்கடஹர சதுர்த்தி திருநாளை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக மூலவர் சித்தி விநாயகருக்கு மஞ்சள், பால், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு நறுமண திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து சுவாமிக்கு வண்ண மலர்மாலைகள் கொண்டு சர்வ அலங்காரம் நடைபெற்றன. பின்னர் விநாயகப் பெருமானுக்கு உதிரி புஷ்பங்களால் அர்ச்சனைகள் நடைபெற்றன. நிறைவாக தேங்காய் தீபம் ஏற்றி, மகா பஞ்சமுக கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ சித்தி விநாயகர் பெருமானுக்கு அர்ச்சனைகள் செய்து வழிபட்டனர்

Tags

Next Story