நித்திய சுமங்கலி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு அமாவாசை மற்றும் முக்கிய விசேஷ தினங்கள் ஆடி வெள்ளி போன்ற தினங்களில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி தை மாத முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் சாமிக்கு பல்வேறு முக்கிய அபிஷேகங்கள் ஆன பால், தயிர், மஞ்சள், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், விபூதி, இளநீர், பன்னீர், போன்ற வாசனை திரவியங்களால் அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மனுக்கு வெள்ளி காப்பு மஞ்சள் அலங்காரம் சிறப்பாக செய்யப்பட்டு மகாதீபாரணை நடைபெற்றது. தை முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இந்த சிறப்பு அலங்காரத்தை கோவில் மணி பூசாரி அவர்கள் சிறப்பாக செய்திருந்தார்.