பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு
குமாரபாளையம் பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு வைகாசி மாத முதல் ஞாயிறு சிறப்பு வழிபாடு நடந்தது.
குமாரபாளையம் பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு வைகாசி மாத முதல் ஞாயிறு சிறப்பு வழிபாடு நடந்தது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு வைகாசி மாத முதல் ஞாயிறு சிறப்பு வழிபாடு நடந்தது. வைகாசி மாத முதல் ஞாயிற்றையொட்டி, குமாரபாளையம் திருவள்ளுவர் நகர் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடந்தன. இதே போல் அக்ரஹாரம் லட்சுமிநாராயண சுவாமி கோவில், விட்டலபுரி பாண்டுரங்கர் கோவில், ராமர் கோவில், கோட்டைமேடு தாமோதர பெருமாள் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டன.
Next Story