காலபைரவர் கோயிலில் பௌர்ணமி சிறப்பு யாகம் - பக்தி பரவசத்தில் பக்தர்கள்

காலபைரவர் கோயிலில் பௌர்ணமி சிறப்பு யாகம் - பக்தி பரவசத்தில் பக்தர்கள்

காலபைரவர் கோவில் சிறப்பு பூஜை  

வேட்டவலம் அடுத்த ஜமீன் கூடலூரில் பௌர்ணமியையொட்டி மகா காலபைரவர் கோயிலில் சிறப்பு யாகம்

பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜமீன் கூடலூரில் உள்ள காலபைரவர் கோவிலியோல் சிறப்பு யாகம் நடைபெறுவது வழக்கம். அதே போல இந்த ஆண்டும் ஜமீன் கூடலூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு மகா காலபைரவர் கோயிலில் நேற்று கார்த்திகை மாத பௌர்ணமியை யொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி கோயில் நிறுவனர் பரமானந்த சுவாமிகள் காலை 11 மணிக்கு 108 சங்காபிஷேகம், 108 மூலிகைகள் கொண்டு சிறப்பு யாகம்,மற்றும் பிரபஞ்ச தியான பயிற்சி ஆகியவற்றை நடத்தினார். அதனை தொடர்ந்து மதியம் 2 மணியளவில் காலபைரவருக்கு பால்,பன்னீர், சந்தனம், இளநீர், பஞ்சாமிர்தம் ஆகியவை கொண்டு சிறப்பு அபிஷேக,ஆராதனை ஆகியவை நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் காலபைரவர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முடிவில் பக்தர்களுக்கு கோயில் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story