வரும் 13 ந் தேதி கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி - ஆட்சியர் உமா தகவல்

நாமக்கல் மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2023 ஆம் ஆண்டு ஜவர்லால் நேரு பிறந்தநாளையொட்டி 13.12.2023 அன்று நாமக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு / தனியார் கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டிகள் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி காலை 9.30 மணி முதல் 1.00 மணி வரை நடைபெறும். இப்போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெறும் கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5000/- இரண்டாம் பரிசு ரூ.3000/- மூன்றாம் பரிசு ரூ.2000/- வழங்கப் பெற உள்ளது. 13.12.2023 அன்று கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்பெறும் பேச்சுப் போட்டிக்கான தலைப்புகள் :

1. சுதந்திரப் போராட்டத்தில் நேரு, 2. பஞ்சசீல கொள்கை 3. நேருவின் வெளியுறவுக் கொள்கை - போன்ற தலைப்புகளில் மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தலாம். கல்லூரி மாணவ, மாணவிகள் அந்தந்த கல்லூரி முதல்வரின் அனுமதியுடன் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் வழியாக இப்பேச்சுப்போட்டியில் பங்கேற்று பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகக் கூடுதல் கட்டிடத்திலுள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலக தொலைபேசி எண்:04286 - 292164 ஐ தொடர்பு கொள்ளலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தெரிவித்துள்ளார்.

Tags

Next Story