மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி

மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி

 தமிழ் வளர்ச்சித்துறை சார்பிலான கட்டுரை, பேச்சுப் போட்டியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்க வேண்டும் என பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.  

தமிழ் வளர்ச்சித்துறை சார்பிலான கட்டுரை, பேச்சுப் போட்டியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்க வேண்டும் என பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டிலுள்ள 11, 12ஆம் வகுப்பு பயிலும் பள்ளி, மற்றும் கல்லூரி மாணவர்களிடையே பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் வளர்க்கும் நோக்கில் ஆண்டுதோறும் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மாவட்டம் வாரியாக மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்பெற்று பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழ் வளர்ச்சி இயக்குநரின் ஆணைக்கிணங்கவும், மாவட்ட ஆட்சியரின் அனுமதியின் அடிப்படையிலும் நடப்பாண்டில் பெரம்பலூர் மாவட்டத்தில் 11 ,12ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளை 09.01.2024 நாளன்றும் கல்லூரி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளை 10.01.2024 நாளன்று பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளன.

இப்போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் போட்டியில் கலந்து கொள்வதற்குரிய படிவத்தை நிறைவு செய்து தலைமையாசிரியர்/முதல்வர் பரிந்துரையுடன் போட்டி தொடங்கும் முன்பு தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநரிடம் அளிக்கவேண்டும். ஒவ்வொரு பள்ளி மற்றும் கல்லூரியிலிருந்தும் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் ஒவ்வொரு போட்டிக்கும் இருவர் வீதம் மாணவர்கள் மட்டும் கலந்து கொள்ளலாம். போட்டிகளுக்குரிய தலைப்புகள் போட்டி தொடங்குவதற்கு முன்னர் மாணவர்களுக்கு அறிவிக்கப்படும். ஒவ்வொரு போட்டிக்கும் முதல் பரிசு ரூ.10,000/-, இரண்டாம் பரிசு ரூ.7,000/-, மூன்றாம் பரிசு ரூ.5,000/- என பரிசுத் தொகை வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம். தெரிவித்துள்ளார்.

Tags

Next Story